கொரோனா நோயாளிகள் 4 பேர் சாவு
கதக்கில், வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 4 பேர் சாவு
கதக்:
கதக் மாவட்டம் முண்டரகி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி நள்ளிரவு ஒரு பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் 2 பேருக்கும் வென்டிலேட்டர் வசதி தேவைப்பட்டுள்ளது.
இதற்காக கதக் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் முண்டரகி ஆஸ்பத்திரி நிர்வாகிகள் வென்டிலேட்டர் கேட்டுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணும், மற்றொரு நபரும் பரிதாபமாக இறந்து விட்டார்கள்.
பின்னர் நேற்று முன்தினம் காலையிலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் 2 கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதி தேவைப்பட்டது அந்த நோயாளிகளுக்கும் வென்டிலேட்டர் வசதி கிடைக்காததால், 2 பேரும் இறந்து விட்டார்கள்.
அரசு ஆஸ்பத்திரியில் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 4 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்ததால் பரபரப்பு உண்டானது. ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகளின் குடும்பத்தினர் திரண்டு வந்தனர். டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக தான் 4 பேரும் அடுத்தடுத்து உயிர் இழக்க நேரிட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் முண்டரகியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story