கர்நாடகத்தில் புதிதாக 39,510 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 39,510 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 May 2021 12:09 AM IST (Updated: 12 May 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 39,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 480 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு:


கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

480 பேர் உயிரிழந்தனர்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 238 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39 ஆயிரத்து 510 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 13 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்தனர். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 22 ஆயிரத்து 584 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 14 லட்சத்து 5 ஆயிரத்து 869 பேர் மீண்டுள்ளனர்.


மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 87 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 15 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக...

பாகல்கோட்டையில் 676 பேர், பல்லாரியில் 1,558 பேர், பெலகாவியில் 755 பேர், பெங்களூரு புறநகரில் 688 பேர், பீதரில் 158 பேர், சாம்ராஜ்நகரில் 411 பேர், சிக்பள்ளாப்பூரில் 609 பேர், சிக்கமகளூருவில் 537 பேர், சித்ரதுர்காவில் 193 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தட்சிண கன்னடாவில் 915 பேர், தாவணகெரேயில் 212 பேர், தார்வாரில் 740 பேர், கதக்கில் 456 பேர், ஹாசனில் 654 பேர், ஹாவேரியில் 465 பேர், கலபுரகியில் 971 பேர், குடகில் 892 பேர், கோலாரில் 913 பேர், கொப்பலில் 414 பேர், மண்டியாவில் 1,359 பேர், மைசூருவில் 2 ஆயிரத்து 170 பேர், ராய்ச்சூரில் 763 பேர், ராமநகரில் 440 பேர், சிவமொக்காவில் ஆயிரத்து 108 பேர், துமகூருவில் 2 ஆயிரத்து 496 பேர், உடுப்பியில் 1,083 பேர், உத்தரகன்னடாவில் 1,084 பேர், விஜயாப்புராவில் 485 பேர், யாதகிரியில் 426 பேர் என மாத்தம் 39 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இறப்பு எண்ணிக்கை

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 259 பேரும், பல்லாரியில் 28 பேரும், பீதரில் 7 பேரும், சாம்ராஜ்நகரில் 12 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், சிக்கமகளூருவில் 5 பேரும், சித்ரதுர்காவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும் இறந்துள்ளனர்.

தாவணகெரேயில் 3 பேரும், தார்வாரில் 6 பேரும், கதக்கில் 3 பேரும், ஹாசனில் 16 பேரும், ஹாவேரியில் 5 பேரும், கலபுரகியில் 5 பேரும், குடகில் 7 பேரும், கோலாரில் 3 பேரும், கொப்பலில் 3 பேரும், மண்டியாவில் 3 பேரும் இறந்துள்ளனர்.

மைசூருவில் 12 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 10 பேரும், துமகூருவில் 16 பேரும், உடுப்பியில் 3 பேரும், உத்தரகன்னடாவில் 18 பேரும், விஜயாப்புராவில் 8 பேரும், யாதகிரியில் 7 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 480 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளின் எண்ணிக்கை

கர்நாடகத்தில் தினமும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனால் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாசோதனைகளின் எண்ணிக்கை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

 எனவே பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பாதித்தவர்களை விரைந்து குணப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story