தள்ளுவண்டியில் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த வியாபாரி
ஊரடங்கால் வாகனங்கள் ஓடாததால் தள்ளுவண்டியில் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த வியாபாரி
பீதர்:
கர்நாடகத்தில் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், வாகனங்கள் ஓடாததால் வியாபாரி ஒருவர் தனது குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த சம்பவம் நடந்துள்ளது. பீதர் மாவட்டம் புறநகரில் ஒரு வியாபாரி வசித்து வருகிறாா்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த வியாபாரி தள்ளுவண்டியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்று வருகிறாா். நேற்று காலையில் வியாபாரியின் குழந்தைகளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல எந்த ஒரு வாகனமும் வியாபாரிக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து, தனது 2 குழந்தைகளையும் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு வியாபாரியும், அவரது மனைவியும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் 2 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வியாபாரி தனது குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததை பார்த்த மக்கள் கண்கலங்கினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story