பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி சிவலட்சுமி (வயது 42). இவர் மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வாகைகுளம் வந்து கொண்டிருந்தார். வாகைகுளம் கணக்கன் நகர் அருகே வந்தபோது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சிவ லட்சுமி அருகில் சென்று கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story