காகித ஆலையில் வேலை பார்த்த டிரைவர் எந்திரம் சரிந்து விழுந்து சாவு


காகித ஆலையில் வேலை பார்த்த டிரைவர் எந்திரம் சரிந்து விழுந்து சாவு
x
தினத்தந்தி 12 May 2021 1:23 AM IST (Updated: 12 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலையில் வேலை பார்த்த டிரைவர் எந்திரம் சரிந்து விழுந்து உயிரிழந்தார்

நொய்யல்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம் சத்திரம் செல்லும் சாலை அருகே உள்ள காந்தி நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 34). டிரைவர். இவரது மனைவி சத்யா(19). இவர்களுக்கு 24 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அஜித்குமார் புகளூர் காகித ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நேற்று காலை எந்திரத்தை இயக்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எந்திரம் சரிந்து  விழுந்தது. இதில், அஜித்குமார் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு காகித ஆலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அஜீத்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story