மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 12 May 2021 1:42 AM IST (Updated: 12 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் பயணியர் பங்களா பஸ் நிறுத்தம் முன்பு நேற்று முன்தினம் இரவு, சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்து சாலை ஓரத்தில் கிடந்தார். இது பற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத கிடங்கில் வைத்தனர். இறந்த முதியவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவரை பற்றி தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையதிற்கு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story