உடல்நலக்குறைவால் தவித்தவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்ற அதிகாரி


உடல்நலக்குறைவால் தவித்தவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்ற அதிகாரி
x
தினத்தந்தி 12 May 2021 1:50 AM IST (Updated: 12 May 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் தவித்தவரை போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அதிகாரி அழைத்துச்சென்றார்.

பெரம்பலூர்:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூரை அடுத்த தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி நின்று கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம், வாகனத்தில் அந்த வழியாக வந்தார். அப்போது அவரிடம் ராமச்சந்திரன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்ற தான் மருத்துவமனைக்கு செல்ல உதவிடுமாறு கூறினார். இதையடுத்து ராமச்சந்திரனையும், அவருடன் வந்தவரையும், தான் பயணித்த அரசு வாகனத்தில் கூடுதல் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம் அழைத்து வந்து பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார். அவரது மனிதாபிமான செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story