சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர் பலி மேலும் 475 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர் பலி மேலும் 475 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 May 2021 2:15 AM IST (Updated: 12 May 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 475 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 475 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
475 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 532 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 245 பேர், ஆத்தூரில் 24 பேர், வீரபாண்டியில் 22 பேர், தாரமங்கலத்தில் 21 பேர், ஓமலூர், சங்ககிரியில் தலா 19 பேர், எடப்பாடியில் 16 பேர், வாழப்பாடியில் 13 பேர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளியில் தலா 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 10 பேர், காடையாம்பட்டி, கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 4 பேர், நரசிங்கபுரத்தில் 2 பேருக்கும், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
3,475 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 457 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் அவர்கள் செய்யப்பட்டனர். தொடர்ந்து 3,475 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 70 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
18 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 63, 56, 47, 48, 47, 75 ஆகிய வயதுடைய ஆண்களும், 45, 49 வயதுடைய பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் சேலத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். மேலும் 42, 61, 29, 58, 67, 59 ஆகிய வயதுடைய ஆண்களும், 67, 50 வயதுடைய பெண்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிரிழந்தனர். மொத்தம் 5 பெண்கள் உள்பட 18 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story