மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி; புதிதாக 879 பேர் பாதிப்பு


மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி; புதிதாக 879 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 12 May 2021 2:47 AM IST (Updated: 12 May 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 879 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 879 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் 4 பேரும், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம், சின்ன பள்ளிபாளையம், நாகையநல்லூர் ஊராட்சி கல்லூர் பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும், காடுவெட்டியில் ஒருவரும் அடங்குவார்கள்.

இவர்கள் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 31,153 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 4,882 பேர் உள்ளனர். 655 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 25,985 ஆகும்.

7 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 76,72 வயதைய 2 பெண்கள் மற்றும் 88, 74, 63, 56, 54 வயதுடைய 5 ஆண்கள் என நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பொதுமக்கள் ஊரடங்கு வேளையில் தேவையின்றி வெளியே  செல்வதை தவிர்க்கவும், சமூக விலகலை கடைப்பிடிக்கவும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Next Story