கோவில் பூசாரி கொலையில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கோவில் பூசாரி கொலையில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 12 May 2021 2:50 AM IST (Updated: 12 May 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கோவில் பூசாரி கொலையில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை, மே.12-
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரியான இவர் கடந்த மாதம் 18-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீவலப்பேரியைச் சேர்ந்த மாடசாமி மகன் பேச்சுகுட்டி (வயது 22), சீவலப்பேரி புதுக்காலனி தெருவை சேர்ந்த முண்டசாமி மகன் தங்கபாண்டி (23), சீவலப்பேரி நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் முருகன் (21) உள்பட சிலரை கைது செய்தனர்.  

இந்த நிலையில் பேச்சுகுட்டி, தங்கபாண்டி, முருகன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில், அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை போலீசார், பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்கள்.

Next Story