கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிபாளையத்தில் 3 தெருக்கள் அடைப்பு
பள்ளிபாளையத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக 3 தெருக்கள் அடைக்கப்பட்டன.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சியில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனிடையே நகராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில் தெரு, ராஜவீதி, சுபாஷ்நகர் ஆகிய தெருக்களில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். மேலும், பலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் அந்த 3 தெருக்களையும், தடுப்புகள் அமைத்து அடைத்தனர். மேலும் அந்த தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நகராட்சி சார்பில் அங்கு சுகாதார பணிகளும், அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story