நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு புதிய உச்சம்: டாக்டர் உள்பட 372 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
372 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 192 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் திருச்செங்கோட்டை சேர்ந்த டாக்டர் உள்பட 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,564 ஆக உயர்ந்து உள்ளது.
2,063 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 213 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்து 362 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 63 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒரே நாளில் 361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் நேற்று அது புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
2 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 137 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த 57 வயது பெண்ணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபேது கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த 72 வயது முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story