பள்ளிபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் பள்ளி ஆசிரியை
பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகள்கள் இருந்தனர். அதில் முதல் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகளான இந்துமதிக்கு (வயது 33) திருமணம் ஆகவில்லை. முதுநிலை பட்டதாரியான இவர் தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்துமதிக்கு திருமணத்திற்கு பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் ஒட்டமெத்தையில் குடியேறினார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது இரவு 11 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டது. இதைக்கேட்டு சந்திரசேகர் விழித்து பார்த்தபோது, இந்துமதி மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இந்துமதியை உடனடியாக மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு இந்துமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று இந்துமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story