எடப்பாடியில் 1,396 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


எடப்பாடியில் 1,396 மதுபாட்டில்கள் பறிமுதல்  2 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 2:57 AM IST (Updated: 12 May 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடியில் 1,396 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி:
எடப்பாடியில் 1,396 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ய 2 இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் செங்கோடன் மகன் சீனிவாசன் (வயது 35) என்பவரிடம் இருந்து 629 மதுபாட்டில்களும், சுப்பராயன் மகன் சக்திவேல் (29) என்பவரிடம் இருந்து 117 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது
இந்த மது பாட்டில்களின் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும். இதையடுத்து 2 பேர் மீதும், மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் எடப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஏரிேராட்டை சேர்ந்த சின்னதுரை என்பவரிடம் இருந்து 650 மதுபாட்டில்களை எடப்பாடி போலீசார் பறிமுதல் செய்தனர். போலீைச கண்டதும் அவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story