நெல்லையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு


நெல்லையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 12 May 2021 3:08 AM IST (Updated: 12 May 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா செய்யது அலி (வயது 45). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். வீட்டின் வெளிப்புற சுவரில் பெயிண்டு அடிப்பதற்காக சாரம் அமைத்து அதில் ஏறி நின்று பெயிண்டு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை அருகில் உள்ள மின்கம்ப ஒயரில் பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் தாக்கி காஜா செய்யது அலி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காஜா செய்யது அலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story