தென்காசியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 400-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 518 பேர் குணமடைந்து உள்ளனர். ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றும் 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 55, 67, 76 வயது பெண்கள் மற்றும் தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 48 வயது ஆண் ஆகிய 4 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து பலி எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story