கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2021 4:15 AM IST (Updated: 12 May 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் சென்னிமலை அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை
கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் சென்னிமலை அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருடைய மனைவி ருக்குமணி. இவர்களுடைய மகள் சவுபர்ணிகா (வயது 17).
இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.
சாவு
இதனால் சவுபர்ணிகா மனமுடைந்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.  இதை கண்டதும் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நேற்று இறந்துவிட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story