ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்தது- பெண் படுகாயம்


ரோட்டில் சென்று கொண்டிருந்த  கார் வீட்டுக்குள் புகுந்தது- பெண் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2021 4:17 AM IST (Updated: 12 May 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்ததில் பெண் படுகாயம் அடைந்தார்.

கொடுமுடி
திருச்சியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் இருந்து காரில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொடுமுடி அருகே கோட்டைகாட்டுவலசு என்ற இடத்தில் இரவு 9 மணி அளவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த ருக்குமணி அம்மாள் (55) என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாக புகுந்தது.  இந்த விபத்தில் வீட்டு முன்பு உட்கார்ந்திருந்த ருக்குமணி அம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story