மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 6:04 PM IST (Updated: 12 May 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தங்கும் விடுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான சோலார் மின்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். 

சம்பவத்தன்று இவர், தங்கும் விடுதி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். 

சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தான் நிறுத்தியிருந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் புகார் அளித்தார்.

 அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் தலைமையிலான போலீசார், திண்டுக்கல்- கரூர் நான்கு வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

 விசாரணையில் அவர்கள் வேடசந்தூர் அருகே உள்ள திருமாணிக்கனூரை சேர்ந்த சிவா (19), தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த திருச்செல்வன் (18) என்று தெரியவந்தது. 

மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரவிக்குமாருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story