18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வாங்கிய 3 லட்சம் கோவாக்சின் 2-வது டோஸ் போடுபவர்களுக்கு பயன்படுத்தப்படும் மாநில அரசு முடிவு
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வாங்கிய 3 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி மருந்தை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் போட மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகா் மும்பையில் கோவாக்சின் மருந்து கையிருப்பு இல்லாததால் நகரில் 2 நாட்கள் அந்த தடுப்பூசி போடப்படவில்லை. இதேபோல ஏற்கனவே கோவாக்சின் போட்டு கொண்டவர்களுக்கும் 2-வது டோஸ் செலுத்த அந்த மருந்து மிக குறைந்த அளவில் தான் மாநில அரசிடம் உள்ளது.
இந்தநிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு வாங்கப்பட்ட 3 லட்சம் கோவாக்சினை 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
மாநிலத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த வேண்டியது உள்ளது. 2-வது டோஸ் சரியான நேரத்தில் செலுத்தப்படவில்லையெனில் அது தடுப்பூசியின் பயனை கடுமையாக பாதிக்கும். அது போன்ற பிரச்சினையை தவிர்க்க மாநில அரசு 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக வாங்கிய 3 லட்சம் கோவாக்சினை 45 வயது மேல் உள்ளவர்களுக்கு செலுத்த முடிவு செய்து உள்ளது. தற்போது மாநில அரசிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்த 35 ஆயிரம் கோவாக்சின் மருந்து மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story