கோவில்பட்டியில் டீக்கடைகள் மூடல்
கோவில்பட்டியில் டீக்கடைகள் மூடப்பட்டன.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று போலீசார் அதிரடி நடவடிக்கையால் சமூக இடைவெளியை பின்பற்றாததால் பெரும்பாலான டீக்கடைகள் மூடப்பட்டன.
டீக்கடைகளில் கூட்டம்
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி இல்லமால், பலர் முககவசம் அணியாமலும் நீண்ட நேரம் டீ கடைகளில் இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
போலீசார் நடவடிக்கை
இந்நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் தலைமையில் போலீசார் சாதரண உடையில் டீ கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறி அதிகமான மக்கள் கூட்டத்துடன் டீ விற்பனை செய்த கடைகளுக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாத பெரும்பாலான டீ கடைகள் அடைக்கப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் வாகன போக்குவரத்து
கோவில்பட்டியில் நேற்று மார்க்கெட் மெயின் ரோடு பகுதிகளில் குடும்பத் தேவைக்கு காய்கறி, பலசரக்கு பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க செல்வதாக கூறி இருசக்கர வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். போலீசார் பொதுமக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர். ஆனாலும், மதியம் 12 மணி வரை சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் கார் போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது.
Related Tags :
Next Story