கோத்தகிரியில் உலக செவிலியர் தினம்


கோத்தகிரியில் உலக செவிலியர் தினம்
x
தினத்தந்தி 12 May 2021 8:09 PM IST (Updated: 12 May 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உலக செவிலியர் தினம்

கோத்தகிரி

கோத்தகிரி மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. 

தலைமை டாக்டர் சிவகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது,  தற்போது நிலவும் கடினமான சூழ்நிலையில் செவிலியர்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து, சேவை புரிந்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிப்பது அனைவரின் கடமையாகும் என்றார்.  

இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் செவிலியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். முடிவில் முன்னாள் தலைமை மருத்துவர் சிவகுமார் நன்றி கூறினார்.


Next Story