முழு ஊரடங்கில் ஊர்சுற்றினால் அபராதம்-வாகனங்கள் பறிமுதல்


போலீஸ் ஐ.ஜி.அமல்ராஜ் எச்சரிக்கை
x
போலீஸ் ஐ.ஜி.அமல்ராஜ் எச்சரிக்கை
தினத்தந்தி 12 May 2021 8:29 PM IST (Updated: 12 May 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கில் ஊர்சுற்றினால் அபராதம்வாகனங்கள் பறிமுதல்

கோவை
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியும், மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது


கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மதியம் 12 மணி வரை மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், டீக்கடைகள் திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் மக்கள் அவரவர் வீடுகளின் பக்கத்திலுள்ள கடைகளிலே சாமான்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்காக வாகனங்களை எடுத்துக்கொண்டு தூர இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்பிறகு சிலர் தங்கள் வாகனங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். இவர்களை கண்காணிக்க கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிக்க படுகிறார்கள். 

2 நாட்களாக இப்படி வாகனங்களில் வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இனிமேல் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story