கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி தொல்.திருமாவளவன் அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னை,
புதுச்சேரி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
புதுச்சேரியில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க. உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பா.ஜ.க.வை தோளில் சுமக்கும் என்.ஆர். காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்து கொள்ளவேண்டும் என்றும், தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்று பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story