வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 12 May 2021 3:46 PM GMT (Updated: 12 May 2021 3:46 PM GMT)

குற்றசம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் பாலசசிக்குமார் என்பவரின் மகன் பால சபரிகிஷோர் (வயது23). இவரை கடந்த பிப்ரவரி மாதம் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடை முன்பு ஆர்.எஸ்.மடையை சேர்ந்த முனியசாமி மகன் கொக்கிகுமார், கமுதி கண்ணார்பட்டி பதினெட்டாம்படியான் மகன் குருவி ரமேஷ் (23), எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த சரவணன், ஜெமினிராஜ், கோயா விக்னேஷ், மணிகண்டபிரபு ஆகியோர் சேர்ந்து வாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவம்தொடர்பாக சபரிகிஷோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்டவர்களை கைது செய்தனர். இவர்களில் கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்த பதினெட்டாம்படியான் மகன் ரமேஷ் என்ற குருவிரமேஷ் (23) என்பவர் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்ய மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தேனி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரமேஷ் என்ற குருவி ரமேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்த கேணிக்கரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story