அருளம்பாடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
அருளம்பாடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே அருளம்பாடி கிராமம் உள்ளது. இங்கிருந்து வடபொன்பரப்பி செல்லும் சாலையின் வளைவு பகுதியில் உள்ள தாழ்வழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதை காண முடிகிறது. பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசுவதால் பலத்த சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்து விழுகின்றன. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் தீப்பொறிகளால் அருகில் உள்ள கரும்பு வயல்கள் தீப்பிடித்து எரியும் சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால் ஒன்றோடொன்று உரசாமல் இருக்க சிலர் மரக்குச்சியில் மின்கம்பிகளை கட்டி வைத்துள்ளனர். ஆனால் பலத்த காற்று வீசும்போது மரக்குச்சி சரிந்து விடுவதால் அது பயன் இல்லமால் போகிறது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story