திருட முயன்ற 2 பேர் கைது


திருட முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 9:52 PM IST (Updated: 12 May 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் கூத்தியார்குண்டுவைச் சேர்ந்த புலிக்குத்தி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் கண்ணன் (38), மூக்கன் மகன் கண்ணன் (34) ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு நிறுவனத்துக்குள் புகுந்து திருட முயன்றுள்ளனர். இதை பார்த்த காவலாளி புலிக்குத்தி அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து காவலாளியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புலிகுத்தி புகார் செய்தார். அதன் பேரில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story