ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 May 2021 9:57 PM IST (Updated: 12 May 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ளது வாணாபுரம் ஊராட்சி.  இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதி உள்ளது. மாவட்டத்திலேயே அதிக பிரசவம் இங்கு நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர் உள்ளனர். ஆனால் காலையில் வரும் நோயாளிகளுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதனால் மாலை நேரத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இல்லை என்றால் பஸ்சில் பயணம் செய்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கோ சென்று வரவேண்டிய நிலை உள்ளது.

எனவே வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமமக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியும், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைகொண்டு தினசரி சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story