பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
திருவண்ணாமலை மாவட்டம், பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி. செல்வராஜ் (வயது 41). இவர் வேலூர் சத்துவாச்சாரியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 9-ந் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காமக்கூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது அங்கு அவரது இறுதி ஊர்வலத்தில் வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன், ஆரணி சரக போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.எஸ்.கிருஷ்ணன் உள்பட உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் போலீசார் காமக்கூருக்கு வந்து அரசு மரியாதையுடன் செல்வராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின்போது போலீசார் 21 குண்டுகள் முழங்க 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர்.
Related Tags :
Next Story