கடலூர் நாட்டு மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதியது
கடலூரில் நாட்டு மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதியது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.இதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டது. அதன்படி நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதாவது, ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்து கடைகளும் இயங்கலாம் என்று அறிவித்தது.
கூட்டம் அலைமோதியது
அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் 2 நாட்டு மருந்து கடைகளும், ஆங்கில மருந்து கடைகளை போல் இரவு வரை திறக்கப்பட்டு இருந்தது.இதனால் இந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் சித்த மருத்துவத்தை நாடி வருவதால் இந்த கடைகளில் மஞ்சள், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்தரத்தை போன்ற பல்வேறு வகையான நாட்டு மருந்துகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
இதனால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நாட்டு மருந்து கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதில் சிலர் தனிமனித இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் நின்று கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story