ஒரே நாளில் 18 பேர் சாவு 2636 பேருக்கு கொரோனா


2636 பேருக்கு கொரோனா
x
2636 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 12 May 2021 10:23 PM IST (Updated: 12 May 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 18 பேர் சாவு 2636 பேருக்கு கொரோனா

கோவை


கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும், உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது.


இதுதவிர, நேற்று கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 1,766 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 195-ஆக உள்ளது. 


கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 178 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

மேலும், மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 2,942 உள்ள நிலையில், 10 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. சாதாரண படுக்கைகள் 546 காலியாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 18 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்தது.

கோவை அவினாசி ரோட்டில் ஆயுதப்படை பயிற்சி மைதானம் உள்ளது. இங்கு வசிக்கும் 3 ஆயுதப் படை போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் அவர்களது குடும்பங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 

ஆயுதப்படை போலீசாரின் குடியிருப்பு பகுதியில் கொரோனா பரவல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story