அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 600 ‘ரெம்டெசிவிர்’ மருந்து வருகை
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 600 ‘ரெம்டெசிவிர்’ மருந்து வருகை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகள் வழங்கப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஆபத்தான நிலைக்கு செல்வதை தடுக்க ரெம்டெசிவிர் ஊசி போடப்படுகிறது.
இது தொற்று பரவல் தீவிரமாவதை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் அவர்கள் அவசர பிரிவிற்கு செல்வதை தடுக்கும். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இதுவரை அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 5 ஆயிரத்தும் மேற்பட்ட நபர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து 600 ரெம்டெசிவிர் மருந்துகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவை அங்குள்ள மருந்து கிடங்கில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story