பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு


பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 12 May 2021 10:46 PM IST (Updated: 12 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு செய்யப்பட்டது.

இடிகரை

பெரியநாயக்கன்பாளையத்தில் வித்யாலய மேட்டில் இருந்து வண்ணாங்கோவில் பிரிவு வரை ரூ.88 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான சுமார் 15 அடி ஆழம் குழிகள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வண்ணாங்கோவில் பிரிவில் பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வானுயர பீச்சியடித்தது. இந்த தண்ணீர் சாலையில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

 இதையடுத்து வீரபாண்டி பிரிவு நீரேற்று மையத்தில் உள்ள மோட்டார்கள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனையடுத்து குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது.

Next Story