கிணத்துக்கடவு அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
கிணத்துக்கடவு அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தில் 50 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் சிமெண்டு மேற்கூரை செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா மேற்பார்வையில் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். தொடர்ந்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story