வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு
வால்பாறையில் கொரோ னா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, வால்பாறை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் (பொறுப்பு) உத்தரவின்பேரில், நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் துப்பரவு பணியாளர்கள் ஆழியாறு வனத்துறையின் சோதனைச்சாவடியில் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தனர்.
வாகனங்களில் இருப்பவர்களும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கிருமிநாசினி தெளிப்பு
வால்பாறை நகர் பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ஏ.டி.எம். மையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், அனைத்து எஸ்டேட் அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள எஸ்டேட் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்களுடன் இணைந்து தனிமைப்படுத்தி அந்த எஸ்டேட் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தொடர்ந்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழிப்புணர்வு முகாம்
இந்த நிலையில் வால்பாறை சோலையார் அணை பகுதிக்கு அருகில் உள்ள முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய தேயிலை தோட்ட பகுதிக்கே சென்று சிறப்பு கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
வால்பாறை அரசு ஆஸ்பத்திரி சித்தா சிகிச்சை பிரிவு டாக்டர் கார்த்திகேஷ் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சித்தா முறைப்படி எவ்வாறு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து விளக்கினார்.
தூய்மையாக இருப்பது, நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் குடிப்பது, முகக்கவசம் அணிவது, உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள் அதிகம் சேர்த்து கொள்வதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
இதனை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் கபசுர குடிநீர் பொடி, முகக்கவசம், கிருமி நாசினி வழங்கினார்கள். முகாமில் முருகாளி எஸ்டேட் டாக்டர் விபின்ராஜ், மருத்துவ பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story