பொள்ளாச்சியில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு


பொள்ளாச்சியில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 May 2021 10:47 PM IST (Updated: 12 May 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் அரசின் உத்தரவின்படி கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன்படி, மதியம் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்கள் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் விதிமுறையை மீறி மதியம் 12 மணிக்கு பின்னரும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார் வந்தன.

இதையடுத்து, பொள்ளாச்சியில் கோவை மெயின் ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ளதா என்று ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

 இதேபோல், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சுல்தான்பேட்டை, செஞ்சேரி பிரிவு, செஞ்சேரிமலை ஆகிய இடங்களில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை கேமரா மூலம் கண்டறிந்த போலீசார் அப்பகுதிக்கு வாகனத்தில் விரைந்து சென்று அவர்களை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story