நாட்டுப்படகில் பிடித்து வரும் மீன்களுக்கு விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம்
கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் முழு ஊரடங்காலும் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு எதிர்பார்த்த அளவு விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்,
கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் முழு ஊரடங்காலும் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு எதிர்பார்த்த அளவு விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தடைகாலம்
மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி தொண்டி, நம்புதாளை உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல எந்த ஒரு தடையும் இல்லாததால் வழக்கம்போல் நாட்டுப்படகு மற்றும் சிறிய நாட்டுப்படகு பைபர் படகு, கட்டுமரம் உள்ளிட்ட இதன்மூலம் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
இதுதவிர ரோடு பாலம் மற்றும் துறைமுக பகுதிகளிலும் மீனவர்கள் தூண்டில் நரம்பு மூலமும் மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விலையும் உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி நேற்று தூண்டில் நரம்பு மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் தூண்டில் நரம்பில் பெரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது.
தொடர்ந்து அந்த மீனவர் தூண்டில் நரம்பில் சிக்கி இருந்த மீன் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக ரோடு பாலத்தில் நடைபாதையில் நடந்து சென்றபடியே தூண்டில் நரம்பை கையில் பிடித்து இழுத்த படியே ரோடு பாலத்தை விட்டு கடற்கரை பகுதிக்கு இறங்கி நடந்து சென்றார்.
ஏமாற்றம்
அதன் பின்னர் கடற்கரையில் இறங்கி அந்த மீனை மீனவர் தூண்டில் நரம்பில் சிக்கி இருந்த பெரிய மீனை லாவகமாக தூக்கினார். தூண்டில் நரம்பில் சிக்கியிருந்தது முண்டகண்ணி பாறை மீன் என்பதும் சுமார் 30 கிலோ எடை கொண்டதாக இருந்ததும் தெரியவந்தது. நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் சீலா, மாவுலா, நகரை, பாறை, நண்டு உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் சராசரி விலையில் இருந்து ரூ.100 அதிகமாக விலை உயர்ந்துஉள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் முழு ஊரடங்காலும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை உயர்வு இல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story