மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்


மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்
x
தினத்தந்தி 12 May 2021 10:53 PM IST (Updated: 12 May 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை, மே.13-
அறந்தாங்கி லெட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. மணல் கடத்தலில் ஈடுபட்ட இவர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரமேஷ்பாபு மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி ரமேஷ்பாபு குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது. ரமேஷ்பாபு மீது ஏற்கனவே 7 மணல் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆற்று மணலை திருடி இயற்கை வளங்களை அழித்து நீர்வள ஆதார அமைப்புகளுக்கு கேடுவிளை விப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story