தேன்கனிக்கோட்டையில் சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
தேன்கனிக்கோட்டையில் சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அடுத்த பத்தி கவுண்டனூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 36). இவரும் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (45) மற்றும் நாட்றாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (29) ஆகியோரும் மதகொண்டப்பள்ளி நோக்கி நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் உள்ள கொத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சந்திரன், வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story