மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து + "||" + Fire accident

மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து

மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து
மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள பேரூராட்சி அலுவலகம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் நடப்பட்டது. அந்த மின்கம்பத்தின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அங்கு உள்ள திருமண மண்டபம், கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அந்த மின்கம்பத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அந்த கம்பத்தில் உள்ள மின்கம்பியில் தீ துளிர் விட்டுவேகமாக எரிய ஆரம்பித்தது.அதிர்ந்துபோன அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ரசாயன பவுடர் மூலம் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தீ விபத்தில் 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் எரிந்து நாசமாயின
குன்னம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் எரிந்து நாசமாயின
2. தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
3. குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து
குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
4. மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. மராட்டியத்தில் தீ விபத்து: 7 பேர் பலி; 10 பேர் மாயம்
மராட்டியத்தின் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.