கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
வாணியம்பாடி
ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். வங்கி முன்னாள் நகை மதிப்பீட்டாளரான இவர் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதனையடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய மகன் மற்றும் மகள் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுக்கூர் தலைமையில், ஆலங்காயம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) நகர தலைவர் அப்சல் பாஷா, நகர செயலாளர் அஸ்லம் பாஷா, நிர்வாகிகள் முக்தியார், முஸம்மில் பாஷா, இம்தியாஸ் மற்றும் அல்தாப் ஆகியோர் இணைந்து, இறந்த சந்திரசேகரின் உடலை அனைத்து உதவிகளையும் செய்து அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story