கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
இளையான்குடி
இளையான்குடியில் காலை முதல் மதியம் 12 மணிவரை காய்கறி, மளிகை, பால், இறைச்சி, மீன்கள் போன்ற உணவு பொருள்களை வாங்கிச் செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த நேரத்தை தவிர்த்து தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடித்து கொரோனா பற்றிய விழிப்புணர்வையும், முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் 200 ரூபாய், 12 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருந்தால் 1000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், ராஜ்குமார், கென்னடி ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் இளையான்குடி, கண்மாய்க்கரை, பஜார், பஸ் நிலையம், சாலையூர் பகுதி மற்றும் புதூரில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி மைக் மூலம் எச்சரிக்கை செய்தனர்.
Related Tags :
Next Story