வியாபாரிகளுக்கு அபராதம்


வியாபாரிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 May 2021 11:06 PM IST (Updated: 12 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

சிவகங்கை
சிவகங்கையில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறும். தற்போது கொரொனா நோய் பரவலை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் முதல் வாரச்சந்தை நடத்த தடை விதித்திருந்தது. அத்துடன் கடந்த வாரச்சந்தை ரத்து செய்யபட்டது. மேலும் சிவகங்கை நேரு பஜாரில் நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வந்த தினசரி சந்தையையும் நேற்று முதல் சிவகங்கை நகர் பஸ் நிலையத்திற்கு மாற்றி அமைத்துள்ளனர்.  இந்தநிலையில்  புதன்கிழமையான நேற்று காலையில் திடீரென்று சிவகங்கையில் வாரச்சந்தை நடைபெற்றது. அதிகாரிகள் அனைவரும் பஸ் நிலையத்தில் தினசரி சந்தையை சமூக இடைவெளியுடன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களுக்கு சந்தை நடைபெறும் தகவல் தாமதமாக கிடைத்தது. இதன் பின்னர் நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் வந்து காய்கறி வியாபாரிகளுடன் பேசி கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மறு அறிவிப்பு வரும்வரை வாரச்சந்தை நடைபெறாது. எனவே உடனடியாக கடைகளை அப்புறப்படுத்தும்படி தெரிவித்தனர்.  இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் கூறியதாவது:- 
அரசு உத்தரவை மீறி நேற்று வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது. இனி அரசு உத்தரவு வரும் வரை வாரசந்தை அமைக்ககூடாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story