முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் குளித்தலை பகுதியில் போலீஸ் அதிகாரி திடீர் ஆய்வு


முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் குளித்தலை பகுதியில் போலீஸ் அதிகாரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 12 May 2021 11:08 PM IST (Updated: 12 May 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் குளித்தலை பகுதியில் போலீஸ் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குளித்தலை
முழு  ஊரடங்கு
கொரோனா நோய் பரவலை தடுக்கும்வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குளித்தலை பகுதியில் நேற்று குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சசிதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
 குளித்தலை சுங்ககேட் பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் செல்கிறார்களா? இல்லை தேவையற்ற முறையில் சுற்றித்திரிகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். 
பாதுகாப்பு
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமல்லாமல் வேறு எந்தகாரணத்திற்காகவும் யாறும் சுற்றித்திரியக்கூடாதென அறிவுரை வழங்கினார். மேலும் தேவை இன்றி சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
நொய்யல்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி) சரவணன் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, ஊராட்சிகள் செயலர் நளினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சேலம் -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார், வேன், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை தடுத்து நிறுத்தி முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story