விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு


விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:12 PM IST (Updated: 12 May 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி, வலங்கைமானில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மன்னார்குடி:
மன்னார்குடி, வலங்கைமானில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 
கடைகளுக்கு அபராதம் 
கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, மன்னார்குடி துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், நகராட்சி ஆணையர் கமலா, தாசில்தார் தெய்வநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கடை வீதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் திறக்கப்பட்ட கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து  தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
வலங்கைமான் 
இதேபோல் வலங்கைமான் கடைத்தெருவில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  விதிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும்  வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் அருகில் தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் ‘சீல்’ வைத்தனர். மேலும்  அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Next Story