எலனூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
எலனூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
க.பரமத்தி
க.பரமத்தி ஒன்றியம், எலவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சுகாதாரத்துறை சார்பில் புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைகாளிகுறிச்சி, சூடாமணி, ராஜபுரம் ஆகிய ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனையும் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட பயனாளிகளுக்கு சிகிச்சைக்கு தகுந்தவாறு மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான பவுடர்கள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் நித்யா, சுகாதார ஆய்வாளர் கனகராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
Related Tags :
Next Story