கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு


கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:19 PM IST (Updated: 12 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்கப்பட்டது

நொய்யல்
நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்தவர் கருமண்ணன் (வயது 65). விவசாயி. இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமைமாடு ஒன்று அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட கருமண்ணன் அக்கம், பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தும்,  முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த எருமைமாட்டை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.

Next Story