மீன்பிடி திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீசார்


மீன்பிடி திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 12 May 2021 11:20 PM IST (Updated: 12 May 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீசார்

கல்லல்
கல்லல் அருகே வைராபட்டி கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இந்த தகவல் கிடைத்ததும் கல்லல் போலீசார் அங்கு சென்று கொரோனா தொற்று பரவி வரும் தற்போது மீன்பிடி திருவிழா நடத்த கூடாது என தெரிவித்தனர். மேலும் வருவாய் துறையினர், போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த நேரத்தில் தண்ணீரை அப்புறப்படுத்தி மீன் பிடித்தால் ஆடு, மாடுகளுக்கும் தண்ணீர் இருக்காது. மேலும் கொரோனா தொற்று பரவும் சூழலில் கூட்டமாக மீன்பிடிக்க கூடாது எனக் கூறினர். இதைதொடர்ந்து மீன்பிடி திருவிழா கைவிடப்பட்டது.

Next Story