நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,923 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,923 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:25 PM IST (Updated: 12 May 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,923 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 19,923 ஆக அதிகரித்து உள்ளது.
354 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 569 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 354 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,923 ஆக அதிகரித்து உள்ளது.
2,116 பேருக்கு சிகிச்சை
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 300 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 17 ஆயிரத்து 662 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,116 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், அவ்வாறு வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
========

Next Story