டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை ரூ.2¾ லட்சம் கொள்ளை
மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்கேன் எடுக்க சென்றார்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரெங்கநாதன்(வயது36). டாக்டரான இவர் நேற்று முன்தினம் காலை தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்துக்கு சென்று விட்டு அன்று இரவு மூவலூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் சென்று தங்கினார்.
நகை - பணம் கொள்ளை
நேற்று காலை 9 மணிக்கு தனது வீட்டுக்கு ரெங்கநாதன் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. ஆனால் கொள்ளை போன நகைகள் இருந்த பெட்டியில் இருந்த 8 பவுன் நகைகளை எடுக்காமல் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். நகை- பணம் கொள்ளை போனது குறித்து மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ரெங்கநாதன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story